அனுராதபுரத்தில் குளத்தில் மூழ்கி சிறீலங்கா கடற்படைத் தளபதி ஒருவர் பலியாகியுள்ளார். நேற்று அனுராதபுரம் நாச்சடுவம் குளத்தில் நீச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறீலங்கா கடற்படையின் லெப்.கொமாண்டர் தர தளபதி ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளார். இதன்போது குளக்கரையில் இவரது சகாவான ஜக்சன் அன்ரனி என்ற சிங்கள நடிகரும், ஜாதிக ஹெல உறுமியவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உடுவே தம்மலோக தேரரும் கூடவிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.