Please add some comments in guest book area Home page
பக்கம் 2

தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் சிந்தனையில் துளிர்த்தவை இவை

  1. இயற்கை எனது நண்பன் வாழ்க்கை எனது தத்து வாசிரியன் வரலாறு எனது வழிகாட்டி.


  2. பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு; கோழைத்தனத்தின் தோழன்; உறுதிக்குகு எதிரி. மனித பயங்களூக்கெல்லாம் மூலமானது மரணபயம். இந்த மரண பயத்தை கொன்றுவிடுபவன்தான் தன்னை வென்றுவிடுகிறான்; அவன்தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.


  3. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போராட்டமே எமது வாழ்க்கையாகவும், வாழ்க்கையே எமது போராட்டமாகவும் மாறிவிட்டது.


  4. மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.


  5. நான் எப்போதும் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே; செயலால் வளர்ந்தபின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்


  6. ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன்; ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கெளரவம்.


  7. நாம் அரசியல்வாதிகளல்லர்; நாம் புரட்சிவாதிகள்


  8. நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம்; அதற்கு எமது வீரர்களின்இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.


  9. சமாதானத்தை நான் ஆத்மபூர்வமாக விரும்புகிறேன். எனது மக்கள் நிம்மதியாக, சமாதானமாக, கெளரவமாக வாழ வேண்டும் என்பதே எனது ஆன்மீக இலட்சியம்.


  10. விடுதலைப் புலிகள் மக்களிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல; விடுதலைப் புலிகள் ஒரு மக்கள் இயக்கம். புலிகள்தான் மக்கள்; மக்கள்தான் புலிகள்.


  11. எமது மக்கள் போற்றப்படவேண்டியவர்கள்; கெளரவிக்கப்படவேண்டியவர்கள். தேசியப்போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல; அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயாக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் - அனுதாபிகளையும் மனவுறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்க வேண்டும்.


  12. அரசியல் என்பது மக்கள்மீது ஆட்சியை நடாத்தும் அல்லது அதிகாரத்தைச் செலுத்தும் விவகாரம் அல்ல. அரசியல் என்பதுது எமது மக்களுக்ச் சேவை புரியும் பணி; மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றப்படும் தொண்டு.


  13. குட்டக்குட்டத் தலைகுனிந்து அடிமைகளாக, அவமானத்துடன் வாழ்நத தமிழனைத் தலைநிமிர்த்தி - தன்மானத்துடன் - வாழவைத்த பெருமை எமது விடுதலை இயக்கத்தையே சாரும்